Published on 05/04/2019 | Edited on 05/04/2019

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் வருமானவரி அடுத்தடுத்து தொடர் சோதனைகள் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். தர்ணாவில் பேசிய அவர், "பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களை குறிவைத்து தொடர் சோதனைகள் நடத்தப்படுவதாக" குற்றம் சாட்டினார். இன்று காலை கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை ஆகியவை என்னையும், என் குடும்பத்தினரை வேண்டுமென்றே தொந்தரவு செய்கின்றன என குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.