Skip to main content

மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு விதிகளை மத்திய அரசு கடைபிடிக்கிறது - நாராயணசாமி

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு விதிகளை 
மத்திய அரசு கடைபிடிக்கிறது - நாராயணசாமி

துறைமுக தூர்வாரும் டென்டர் தொடர்பாக முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் புகார் கூறியிருந்தார். அப் புகாருக்கு முதல்வர் நாராயணசாமி பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது :-

"துறைமுக தூர்வாருதல் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றது. இதில் ஊழல் எதும் நடக்கவில்லை. அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் ஆதாரம் இல்லாத புகார்களை அரசு மீது சுமத்தி வருகின்றார்" என்றார். மேலும் அவர், "மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவருவோம் எனக்கூறி பொருளாதார வளத்திற்கு எதிராக சென்றுள்ளது. இதற்கு யார் பொறுப்பாவார்? பணமதிப்பிழப்பு இந்திய நாட்டிற்கு எவ்வித பலனையும் கொடுக்கவில்லை.

ஆளும்கட்சி மாநிலத்திற்கு ஒரு விதி, எதிர்கட்சி மாநிலத்திற்கு ஒரு விதி என மத்திய அரசு கடைபிடிக்கிறது. ஹரியானா கலவரம், கோராக்பூர் சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர்களே பொறுப்பேற்க வேண்டும் " என்றும் கூறினார்.

- சுந்தரபாண்டியன் 

சார்ந்த செய்திகள்