Skip to main content

ஜே.என்.யு மாணவர் சங்க தலைவி மீது வழக்குப்பதிவு...

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

case filed on aishe ghosh

 

 

முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்தது. இந்நிலையில், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவி ஆய்ஷ் கோஷ் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 4 ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் கணினி சர்வர் அறைக்குள் புகுந்து அதனை சேதப்படுத்தியதாக ஆய்ஷ் கோஷ் உள்ளிட்ட டோர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்