Skip to main content

புதியமுறையில் பட்ஜெட் தாக்கல்..! புறப்பட்ட நிர்மலா சீதாராமன்..! (படங்கள்)

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் என்றாலும், மாநில பட்ஜெட் என்றாலும் நிதி துறை அமைச்சர் பெட்டியுடன் சென்று பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கம். இந்நிலையில்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன் முறையாக பட்ஜெட் பெட்டியை தவிர்த்து "சிறிய உறையை" கையில் எடுத்து வந்தார்.
 

நாடாளுமன்றத்தில் இன்று காலை 11.00 மணியளவில், 2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து பட்ஜெட்டிற்கு ஒப்புதலை பெற்றார். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார். அதன் பிறகு கேபினட் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்