அனைவருக்கும் பிராட்பாண்ட் இணையம் என்னும் சேவையை தொடங்க நேற்று மத்திய தொலைதொடர்பு அமைச்சர் மனோஜ் சின்கா ஒப்புதல் வழங்கியுள்ளார். மே மாதத்தில் இந்த சேவையை பற்றி தெரிவித்து பின்னர் ஜூலை மாதம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டது. இந்த சேவைக்கான டிஜிட்டல் பாலிசி என்ன என்றால், அனைவருக்கும் நொடிக்கு 50எம்பி தரவேண்டும் என்பதாகும்.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் பேசிய சின்கா, “ எல்லோருக்கும் பிராட்பாண்ட் இணைய வசதி மற்றும் இதனால் 40 லட்சம் வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 2020க்குள் அனைத்து கிராமபஞ்சாயத்திற்கும் 1ஜிபி இணையம் வழங்க வேண்டும் என்று இந்த பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் 10ஜிபி இணைய சேவையாக மாறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இந்தியா தொலை தொடர்புத்துறையில் 137 ஆவது இடத்தில் இருந்துள்ளது, இந்த இடத்திலிருந்து இனி வரும் காலத்தில் 50ஆவது இடத்திற்குள் வரவேண்டும் என்பதற்காகவே இத்திட்டத்தை தொடங்க இருப்பதாக சின்கா தெரிவித்துள்ளார்.