
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, கேரளாவில் பல தரப்பு மக்கள் அதை எதிர்த்து வருகின்றனர். இந்த தீர்ப்பிற்கு பெண்களே எதிர்த்து பேரணியும் நடத்துகின்றனர்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சங்கனேஸ்ரி என்னும் பகுதியில் நேற்றைக்கு முன்தினம் பேரணி நடத்தினார்.
இதையடுத்து இன்று, பாஜகவின் கேரள இளைஞர் அணி திருவணந்தபுரத்திலுள்ள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இல்லத்தை முற்றுகையிட்டனர். சுமார் 300 இளைஞர் இவரது இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். போலிஸார்கள் அமைச்சரின் வீட்டின் முன்பு இரும்பு கம்பிகளை கொண்டு தடைகள் அமைத்ததால் பாஜகவினரால் அதை தாண்டமுடியவில்லை. அப்படி இருந்தபோதிலும் தடையை உடைக்க முயற்சி செய்ததால் அங்கிருந்த போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீரை பீச்சி அடித்தனர். அப்போதும் அவர்கள் கலையாததால், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. இதனால் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அமைச்சர் வீட்டின் முன்பு அமர்ந்து சாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.