குடிபோதையில் மயங்கி கிடந்தவரின் பேண்ட்டுக்குள் பாம்பு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ். குடிகாரரான இவர் அப்பகுதியில் உள்ள சலூன் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை மது அருந்திய அவர், போதை மயக்கத்தில் சாலையோரம் விழுந்துள்ளார். போதையில் அவர் இருந்ததால் பொதுமக்கள் அவரை ஒரு பொருட்டாக நினைக்காமல் தங்கள் வேலையை பார்த்துள்ளார்கள்.
![jk](http://image.nakkheeran.in/cdn/farfuture/TZop_3c7fi4Nb05V9So20LRHBlVAwoWOtVbEA-fjq5g/1582771634/sites/default/files/inline-images/hkj_0.jpg)
இந்நிலையில் முகேஷின் பேண்ட் பகுதியின் வெளியில் வால் போன்று ஒன்று இருப்பதை அப்பகுதியின் வழியாக சென்ற ஒரு முதியவர் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் இருந்தவர்களிடம் சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அதை என்னவென்று பார்த்த போது பேண்ட்டில் இருந்து பாம்பு நெளிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், அவரின் உடையை சற்று விலக்கிவிட்டு பாம்பை இரும்பு கம்பியை கொண்டு வெளியே எடுத்துள்ளார்கள். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. குடிபோதையில் இருந்த அவரை பாம்பு சீண்டவில்லை என்பது ஆச்சரியமான உண்மை.