கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த முறை மனோகர் பாரிக்கர் போட்டியிட்ட பனாஜி தொகுதியில் இந்த முறை அவரது மகன் உத்பல் போட்டியிட வேண்டும் என்ற கருத்து அம்மாநில பாஜக வில் எழுந்துள்ளது. உத்பல் இந்த தேர்தலில் ரோபோட்டியிட வேண்டும் என அம்மாநில தொண்டர்கள் பலர் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இது பற்றி உத்பல்லிடம் கேட்கப்பட்ட போது, "நான் இன்னும் எனது தந்தையின் இழப்பால் ஏற்பட்ட வலியில் இருந்தே வெளிவறவில்லை. எனவே அரசியல் வருகை குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் நேரம் வரும்போது எனது அரசியல் வருகை குறித்து நான் முறையாக அறிவிப்பேன்" என கூறினார்.
பாஜக கட்சி வாரிசு அரசியல் என்பதை வைத்து காங்கிரஸ், திமுக கட்சிகளை தொடர்ந்து விமர்சித்து வந்தது. இந்நிலையில் இந்த முறை மக்களவை தேர்தலில் பாஜக வின் கூட்டணி கட்சியான அதிமுக சார்பிலும் வாரிசு வெட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜக விலும் வாரிசு அரசியல் பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.