Skip to main content

அதிக சொத்துக்களை வைத்திருக்கும் பாஜக.. அருகில் கூட நெருங்காத மற்ற கட்சிகள்!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

bjp

 

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தாமாகவே அளித்த தகவலின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் அறிக்கையின்படி, 2019-20 நிதியாண்டில் அதிக சொத்துகளை கொண்ட தேசிய கட்சியாக பாஜக உள்ளது. அக்கட்சியின் சொத்து மதிப்பு 4,847.78 கோடியாகும். பாஜவிற்கு அடுத்த அதிக சொத்துக்களை கொண்ட தேசிய கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி உள்ளது. 2019-20 அக்கட்சியின் சொத்து மதிப்பு 698.33 கோடியாக உள்ளது. 588.16 கோடி சொத்துடன் காங்கிரஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

 

அதேபோல் அதிக சொத்துக்களை கொண்ட மாநில கட்சியாக சமாஜ்வாடி உள்ளது. அக்கட்சி 563.47 கோடி சொத்துக்களை வைத்துள்ளது. சமாஜ்வாடிக்கு அடுத்த இடத்தில், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் அதிமுகவும் உள்ளன. தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி 301.47 கோடி சொத்துக்களையும், அதிமுக 267.61 கோடி சொத்துக்களையும் வைத்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்