பாஜக கவுன்சிலர் ஒருவர், ஹோட்டலில் வைத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள கன்கெர்கேரா பகுதியில் ப்ளாக் பெப்பர் எனும் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம், பாஜக கவுன்சிலர் மனீஷ் பன்வார் என்பவருக்கு சொந்தமானது எனச் சொல்லப்படுகிறது. இந்த உணவகத்திற்கு, சப் இன்ஸ்பெக்டர் சுக்பால் பன்வார் என்பவர் பெண் ஒருவருடன் உணவருந்த வந்துள்ளார். உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, சப் இன்ஸ்பெக்டருடன் வந்திருந்த பெண்ணுக்கும், ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் தட்டுகளை தூக்கியெறியும் காட்சிகள் CCTV ல் பதிவாகின.
அந்தப் பெண் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக ஹோட்டல் ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையில், ஹோட்டல் கதவுகளை மூடுமாறு உத்தரவிட்ட ஹோட்டல் உரிமையாளரும் கவுன்சிலருமான மனீஷ் பன்வார், போலீஸ் அதிகாரியை கன்னத்தில் மீண்டும் மீண்டும் அறைந்து தள்ளிவிடுகிறார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக மொபைல் ஃபோனில் பதிவு செய்துவிடுகிறார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி நாம் விசாரித்த போது, இது பழைய வீடியோ என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த வீடியோ இப்போது வைரல் செய்யப்பட்டு வருவது, நமது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க அரசின் ஊழலை எதிர்த்து பாஜகவினர் மேற்கு வங்க தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் ஆங்காங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக போலிசார் பேரணியை ஒழுங்குபடுத்த முயல இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் மேற்கண்ட வீடியோவும் வேகமாக பரவி வருகிறது.