இந்தியாவில் மொத்தம் நான்கு லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். அதில் பிச்சைக்காரர்கள் மற்றும் தெரு ஓரங்களில் வாழ்பவர்கள் என 81,000 ஆயிரம் நபர்களுடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது என சமூகநீதித்துறை அமைச்சர் தாவார் சந்த் கெலாட் லோக் சபாவில் இன்று தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மொத்தம் 4,13,670 பிச்சைக்கார்கள் உள்ளனர். அதில் மேற்கு வங்கத்தில் மட்டும் 81,000 ஆயிரம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். நான்கு லட்ச பிச்சைக்காரர்களில் ஆண்கள் 2,21,673 பேர் ,பெண்கள் 1,91,997 பேர் உள்ளனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உத்திரபிரதேசம் 65,835 பிச்சைக்காரர்களுடன் இரண்டாமிடத்திலும், 30,218 பிச்சைக்காரர்களுடன் ஆந்திரா மூன்றாமிடத்திலும் உள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் 2,187பிச்சைக்காரர்களும், பீகாரில் 29,723 பிச்சைக்காரர்களும், மத்திய பிரதேசத்தில் 28,695 பிச்சைக்காரர்களும் உள்ளனர். யூனியன் பிரதேசங்களில் லக்ஷ்வீப்பில் இரண்டு பிச்சைக்காரர்கள், தாத்ரா நகர் ஹவேலி, டையூ, டாமன் மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளில் முறையே 19, 22 மற்றும் 56 என்ற எண்ணிக்கையில் உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் அசாம் 22,116 பிச்சைக்கார்களுடன் முதலிடத்திலும், மிசோரம் 53 பிச்சைக்கார்களுடன் கடைசி இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் தமிழகம் 6814 பிச்சைக்காரர்களுடன் 33வது இடத்தை பிடித்துள்ளது.