Published on 22/01/2019 | Edited on 22/01/2019

உத்திரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூரில் குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டதாக நினைத்து ஆற்றில் தூக்கியெறிந்த சம்பவம் நடந்துள்ளது. ஷாஜகான்பூரில் உள்ள ஏரியிலிருந்து குழந்தையின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையின் போது குழந்தைக்கு பேய்பிடித்துள்ளதாக ஒரு மந்திரவாதி கூறியதை நம்பி அக்குழந்தையை பெற்றோர் குழந்தையை ஆற்றில் தூக்கி வீசியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த காவல்துறை அந்த குழந்தையின் பெற்றோர், மற்றும் அந்த மந்திரவாதியை கைது செய்துள்ளனர்.