ராம் ரஹீம் சாமியார் ஆசிரமத்திற்கு அன்பளிப்பாக வந்த பிணங்கள்?
ஹரியானா மாநிலம் சிர்ஸாவில் உள்ள ஆடம்பர சாமியார் குர்மீத்துக்கு சொந்தமான ஆசிரமத்தில் சோதனை தொடங்கியுள்ளது. ஆசிரமத்துக்குள் பிணங்கள் புதைக்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அந்த பிணங்கள் ஆசிரமத்துக்கு அன்பளிப்பாக வந்த பிணங்கள் என்று ஆசிரமம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிணங்களை ஆற்றில் வீசவோ, எரிக்கவோ, புதைக்கவோ விரும்பாதவர்கள் பிணங்களை ஆசிரமத்துக்கு டொனேட் செய்யலாம் என்று குர்மீத் ராம் ரஹீம் கூறியிருந்ததாக ஆசிரம பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த மறுப்பு குறி்தது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. உள்ளுக்குள் நடக்கும் அட்டூழியங்களை மறைக்கவே இதுபோன்ற அன்பளிப்பு விவகாரங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாக கூறுகிறார்கள்.