Published on 30/03/2019 | Edited on 30/03/2019
நாளை மார்ச் 31 ஆம் தேதி நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஆகும்.
இதனால் நாட்டிலுள்ள அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் தங்களது வரவு செலவு கணக்குகளை முடிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் இந்த முறை மார்ச் 31 ஞாயிற்றுகிழமை வரும் நிலையில் அனைத்து வங்கிகளும் ஞாயிறு அன்று இயங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. ஞாயிறு அன்று வங்கிகள் விடுமுறை விடப்பட்டால், அரசுக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று மார்ச் 30-ம் தேதி இரவு 8 மணி வரையிலும், நாளை மார்ச் 31-ம் தேதி மாலை 6 மணி வரையிலும், வங்கிகளை திறந்து வைத்திருக்க வேண்டும் எனவும் அனைத்து வங்கிகளையும், ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.