தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் இலாப மதிப்பை கணக்கிட்டு யூனிகார்ன் என்ற தகுதி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு நிறுவனம் யூனிகார்ன் தகுதியை பெற வேண்டுமென்றால் குறைந்தது ஒரு பில்லியன் டாலர்கள் அதாவது, 100 கோடி டாலர்கள் சந்தை மதிப்பில் அந்த நிறுவனம் செயல்பட வேண்டும். அப்படி யூனிகார்ன் மதிப்பை பெறும் நிறுவனத்தின் நிறுவனருக்கும் 'யூனிகாரின் தலைமை செயல் அதிகாரி' என்ற அந்தஸ்து வழங்கப்படும். இந்த யூனிகார்ன் தகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்பு தேர்வு செய்து வழங்குகிறது.
இதனை முதல்முறையாக மும்பையைச் சேர்ந்த 27 வயதேயான இந்தியப் பெண் அங்கிடி போஸ் என்பவர் இந்த அந்தஸ்தை பெற்றிருக்கிறார். அங்கிடி போஸ் என்பவர் ஷிலிங்கோ எனும் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தை இயக்கிவருகிறார். இவர் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி அங்கிடி போஸ் நிறுவனமான ஷிலிங்கோவின் மதிப்பு 970 மில்லியன் டாலர்களாக உள்ளது. சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஷிலிங்கோ நிறுவனம் நான்கே ஆண்டுகளில் இந்த இடத்தை அடைந்துள்ளது. இந்தியாவின் பெங்களூருவிலும் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.
யூனிகார்ன் என்ற தகுதியை ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஷிலிங்கோவும், அந்நிறுவனத்தின் இணை நிறுவனரான இந்தியப் பெண்மணி அங்கிடி போஸுக்கு யூனிகாரின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற அந்தஸ்தும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த அந்தஸ்தை பெறும் முதல் இந்தியப்பெண்மணி அங்கிடி போஸ் என்பது இந்தியர்களின் பெருமைக்குரியது.