பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளையுடன் (31.12.2019) அவகாசம் முடியும் நிலையில், 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவகாசத்தை அவகாசத்தை நீட்டித்தது மத்திய நேரடி வரிகள் வாரியம்.
இதுவரை பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng என்ற இணையதளத்தில் சென்று இணைக்கலாம். இதற்காக ஆவணங்கள் எதுவும் தனியாக தேவையில்லை. ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் மட்டும் இருந்ததால் போதும். இந்த இரண்டு எண்களையும் கொடுத்த பிறகு ஆதாரில் உள்ளது போலவே உங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா எனப்படும் குறியீடு அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP)கொடுத்து ஆதார் பான் கார்டை இணைக்கலாம்.
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதா? இல்லையா? என்று உங்களுக்கு சந்தேகம் எழுந்தால், https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற இணையதள முகவரிக்கு சென்று பான் மற்றும் ஆதார் எண்களைப் பதிவிட்டு "வியூ லிங்க் ஆதார் ஸ்டேடஸ்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும், பான் எண்ணுடன் இணைக்கப்பட்டதா? இல்லையா? என்பதை எளிதாக கண்டறியலாம்.