தமிழகத்தை சேர்ந்த இ.எஸ்.எல். நரசிம்மன் தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு கூட்டு ஆளுநராக இருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களுக்கு நான்கு முறை பதவி பிரமாணம் செய்து செய்து வைத்துள்ளார். இந்நிலையில் இன்று நண்பகல் 12.21 மணியளவில் ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் இந்திரா மைதானத்தில் நடைப்பெறும் அரசு விழாவில் ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஐந்தாவது முறையாக ஆந்திர பிரதேச ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார். இது வரை ஒரே மாநில முதல்வர்களுக்கு எந்த ஒரு ஆளுநரும் ஐந்து முறை பதவி பிரமாணம் செய்து வைத்ததில்லை.
இவர் ஒருங்கிணைந்த ஆந்திரா பிரதேசம் மாநில ஆளுநராக இருந்த போது , கடந்த 2010- ஆம் ஆண்டு ஆந்திரா மாநில முதல்வராக கிரண்குமார் ரெட்டிக்கும், அதனைத் தொடர்ந்து 2014- ஆம் ஆண்டு சந்திரபாபு நாயிடுவிற்கும், 2014, 2019- ஆம் ஆண்டுகளில் இரு முறை தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவிற்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் இன்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஐந்தாவது முறையாக ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். ஆந்திர மாநிலத்தில் அதிக ஆண்டுகள் பணிப்புரிந்த ஆளுநராக நரசிம்மன் திகழ்கிறார். இவர் தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.