தங்களது ஒரு வயது மகளை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டி, அக்குழந்தையின் பெற்றோரே நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்த பாபு ஜான் - சமீனா தம்பதியினர் நீதிமன்றத்தை நாடி, தங்கள் ஒரு வயது மகளை கருணை கொலை செய்ய அனுமதி கோரியுள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், இரண்டு குழந்தைகளுமே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவால் உயிரிழந்தது. இந்த நிலையில் மூன்றாவதாக பிறந்த சுகானாவும் இதே குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். தங்களின் நிலம், வீடு முதலிய அனைத்து சொத்துக்களையும் விற்று குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு செலவழித்துள்ளனர்.
இந்தநிலையில் தங்களது சொத்துக்கள், குழந்தைகள் என அனைத்தையும் இழந்து தவிக்கும் இவர்கள், தங்களது மூன்றாவது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கமுடியாமல் திணறி வருகின்றனர். தனது சொத்துக்கள், குழந்தைகள் என அனைத்தையும் இழந்துள்ள இந்த தம்பதியினர், குழந்தையின் சிகிச்சைக்கு தினசரி 3 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும், கூலி தொழிலாளியான தங்களால் அதற்கு ஈடுசெய்ய முடியாததால், குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்