![Ammonia gas leak in private factory ... workers fired!](http://image.nakkheeran.in/cdn/farfuture/drHJ5owKCIJ1CRBg8B4LENBsGMCn9FBQudUyLpWgcXs/1654267948/sites/default/files/inline-images/zzczdaadad.jpg)
தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி அருகே உள்ள அச்சுதாபுரம் என்ற இடத்தில் தனியார் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு பணியிலிருந்த 50க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு தொழிற்சாலை விட்டு வெளியே ஓடி வந்தனர். அமோனியா வாயு கசிவானது அந்தத் தொழிற்சாலைக்கு அருகே உள்ள துணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் பரவியதால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறையினர், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.