கர்நாடகாவில் சிங்கமங்களூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, கர்நாடக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆகியோரது கட் அவுட்டை அப்பகுதி விவசாயிகள் விவசாய நிலங்களில் பறவைகளை விரட்ட பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று பல இழுபறிகளுக்கு பிறகு காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதரவுடன் ஜனதா தளம் சார்பில் குமாரசாமி முதல்வராக பதவியேற்றர். அந்த தேர்தலில் கர்நாடகாவின் சிங்கமங்களூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அந்த தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, எடியூரப்பா போன்றவர்களின் கட் அவுட்கள் அவிழ்க்கப்படாது இருந்த நிலையில் அவற்றை அப்பகுதி விவசாயிகள் விவசாய நிலங்களில் பறவைகளை விரட்ட பயன்படுத்தி வருகின்றனர்.