ஆம் ஆத்மீ கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ ஆல்கா லம்பா அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஆல்கா லம்பா, பின்னர் ஆம் ஆத்மீ கட்சியில் இணைந்தார். சாந்தினி சவுக் பகுதியில் போட்டியிட்ட அவர் அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இந்த நிலையில் சமீப காலங்களில் ஆம் ஆத்மீ கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கட்சியிலிருந்து விலகியே இருந்தார். மக்களவை தேர்தல் பிரச்சாரங்களில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் காங்கிரஸ் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசியதால் ஆல்கா லம்பா விரைவில் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் இன்று தனது ட்விட்டர் பதிவில், "ஆம் ஆத்மிக்கு பிரியாவிடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். கடந்த 6 ஆண்டு பயனம் பலவற்றை கற்றுக்கொடுத்துள்ளது, அனைத்திற்கு நன்றி" என தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மீ கட்சியிலிருந்து ஆல்கா விலகிய நிலையில் விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.