Skip to main content

ம.பியை தொடர்ந்து உ.பியிலும் இரவு நேர ஊரடங்கு!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

UTTARPRADESH

 

இந்தியாவில் ஒமிக்ரான் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400- ஐ நெருங்கி வருகிறது. அதேபோல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அம்மாநிலங்கள் கரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த தொடங்கியுள்ளன.

 

இதற்கிடையே அண்மையில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து மாநிலங்களுக்கு கடிதம் எழுதியிருந்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர், "ஒரு மாவட்டத்தில் கரோனா உறுதியாகும் சதவீதம் 10%க்கும் அதிகமாக இருந்தாலோ அல்லது 40%க்கும் அதிகமான ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஒருவாரத்திற்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலோ அதிகாரிகள் உடனடியாக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.  

 

உள்ளூர் சூழ்நிலை மற்றும் ஒமிக்ரான் பரவும் விகிதத்தைப் பொறுத்து, இந்த வரம்புகளை எட்டுவதற்கு முன்பே மாநிலங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கலாம்" எனவும், கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துதல், பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் மத்திய பிரதேசம், இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணிவரை மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது. அதனைதொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு தற்போது, நாளை முதல் (டிசம்பர் 25) ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது என தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச அரசு, திருமண விழாக்களில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அனுமதி எனவும் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்