நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் உள்ள மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.இவர் அரசியல் முழு கவனம் செலுத்திய நாளிலிருந்தே பிஜேபிக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.இவர் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு ஓட்டலில் தங்கியிருந்த பிரகாஷ் ராஜை செல்ஃபி எடுக்க ஒரு பெண் அனுமதி கேட்டுள்ளார் பிரகாஷ்ராஜ் அதற்கு அனுமதி கொடுத்துள்ளார். பின்பு அந்த பெண்ணும்,அவரது மகளும் பிரகாஷ் ராஜுடன் செல்ஃபி எடுத்துள்ளனர். உடனே அங்க வந்த அந்த பெண்ணின் கணவர் அவரது மனைவியையும்,குழந்தையும் திட்டி உள்ளார்.
இதற்கு என்ன காரணம் கேட்டபோது , பிரகாஷ் ராஜ் தொடர்ந்து மோடியை விமர்சனம் செய்து வருவதால், அவருடன் செல்ஃபி எடுப்பது தவறு என்று கூறியுள்ளார். கணவர் பொது வெளியில் மற்றவர்கள் முன் திட்டியதால் அந்த பெண், அவரது மகள் அங்கேயே அழுதிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ்ராஜ் மன உளைச்சலுடன், அந்த பெண்ணின் கணவரை தனியே அழைத்து, ''என்னையும், மோடியையும் முன்னிறுத்தியா நீங்கள் திருமணம் செய்தீர்கள். பொது இடத்தில் மனைவியை இப்படி அசிங்கப்படுத்துவது தவறு என்று கூறியுள்ளார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டாராம். ஆனால், இந்த சம்பவம் பற்றி பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.