பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ஆவர். இவரின் திரைப்படங்கள் இந்திய மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்ப்பது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னிந்தியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் , வட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆவர். இவர் சமீப காலமாக பொது தொண்டு சேவையை செய்து வருகிறார். இதற்கு உதாரணமாக முஷாப்பர்பூர் , பீகார் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் வங்கியில் கடன்களை பெற்று வங்கியில் கடனை திருப்பி செலுத்தாத ஏழை விவசாயிகள் சுமார் 2084 பேருக்கு விவசாய வங்கி கடன்களை நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் அடைத்தார்.
மேலும் பிப்ரவரி 14 ஆம் தேதி உயிரிழந்த அனைத்து ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் தலா ரூபாய் 10 லட்சம் வழங்கினார். இது போன்ற பல சேவைகளை பாரபட்சம் பாராமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் வருமான வரியாக ரூபாய் 70 கோடியை அரசுக்கு செலுத்தியுள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் நன்கொடைக்கு மத்திய அரசு முழு வருமான வரி விலக்கு அளித்துள்ள போதிலும் ரூபாய் 70 கோடியை அரசுக்கு வரி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் சேவையை பார்த்து மற்ற பாலிவுட் நடிகர் , நடிகைகளும் மக்களுக்கு தானாக முன் வந்து மக்கள் சேவைகள் செய்வதற்கு இனி வரும் காலங்களில் அதிக வாய்ப்பு இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பி.சந்தோஷ், சேலம்.