Published on 09/02/2019 | Edited on 09/02/2019

865 கிலோ அளவுள்ள கஞ்சா ஒரே லாரியில் கொண்டுவரப்பட்டுள்ள சம்பவம் அதனை பிடித்த ஆந்திர மாநில அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தின் அருகில் உள்ள குஜுவாக்கா பகுதியில் தான் இந்த கஞ்சா லாரி பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக அளவிலான கஞ்சா ஒரே லாரியில் வைக்கப்பட்டு கடத்தப்பட்டு பிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. லாரியில் கஞ்சா மூட்டைகளை அடுக்கி அதன்மேல் வாழை சருகுகள் மற்றும் இலைகளை வைத்து எடுத்து வந்துள்ளனர். இந்த வண்டியை மடக்கி விசாகப்பட்டினம் வருவாய் துறை அதிகாரிகளை சோதனை செய்யும்போது இந்த கஞ்சா மாற்றியுள்ளது. இது தொடர்பாக லாரியில் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.