Published on 06/10/2021 | Edited on 06/10/2021

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ரயில்வே போனஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், " மத்திய ரயில்வே துறை ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும். இதன்மூலம் 11.56 லட்சம் பேர் பயனடைவார்கள்" என்றார்.