Published on 13/09/2018 | Edited on 13/09/2018

உத்தரப் பிரதேச மாநித்திலுள்ள பிஜ்னோர் என்னும் ஊரில் மோகித் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இத்தொழிற்சாலையிலுள்ள கொதிகலன் பழுதுப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று கொதிகலன் பழுதை சரிசெய்து கொண்டிருக்கும்போது கொதிகலன் வெடித்துள்ளது. அப்போது, அதை சரிசெய்துகொண்டிருந்த ஊழியர்கள் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், இருவருக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து, இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணி முடுக்கப்பட்டுள்ளது.