Published on 16/04/2019 | Edited on 16/04/2019
இரும்பு தாது எடுக்க சுரங்கத்திற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டதில் 6 லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு, ஒரிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநில அரசுகள் மற்றும் சிபிஐ ஆகியோருக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் இரும்பு தாது எடுப்பதற்காக சுரங்க ஒதுக்கீட்டில் 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான பெஞ்ச் இது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு உட்பட பலருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.