மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
அதில், கரோனா காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வு தற்போது வரை அறிவிக்கப்படவில்லை எனவே நீட் தேர்வு அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த நடப்பு ஆண்டிலேயே மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவை நடைமுறைபடுத்தினால் அதிக மாணவர்கள் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்துவது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் செயல்படுத்த வாய்ப்புள்ளதா எனவும் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.