தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்திலுள்ள விஷாகப்பட்டிணத்தில் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு 4கிலோ தங்கம் ஆபரணமும் மற்றும் 4கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்துள்ளனர்.
விசாகப்பட்டிணம் குருபாம் பகுதியிலுள்ள 140 ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ளது. இங்கு தசரா பண்டிகையை முன்னிட்டு அம்மன் நேற்று முன்தினம் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையொட்டி அம்மனுக்கு 4 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் 4 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
இந்த ரூபாய் வழிபாட்டில் 1 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை நோட்டுகள் இடம்பெற்றிருந்தன. மேலும் வெளிநாட்டு நோட்டுகளும் அம்மனை அலங்கரித்தன. இவை தவிர தங்க பிஸ்கட்டுகள், வைர நகைகளை வைத்தும் அம்மனை அலங்கரித்தனர். அம்மனை வணங்க பொதுமக்கள் இந்த தங்கங்களை கொடுத்துள்ளனர். வழிபாடு முடிவடைந்ததும் உரியவர்களிடமே அதை திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.