Skip to main content

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்... காதலன் எடுத்த விபரீத முடிவு..!

Published on 11/09/2019 | Edited on 11/09/2019


குஜராத் மாநிலம் பலான்புர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வால்மீகி (22). இவருக்கு அப்பகுதியில் உள்ள பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பெண் ராகுலை பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் பெண் வீட்டார் வேறு ஒருவருக்கு தங்களது பெண்ணை மணமுடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த போன ராகுல் தற்கொலை செய்ய முடிவெடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் மேல் ஏறியுள்ளார்.
 

ghj



இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ராகுலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் ராகுல் திடீரென மாடியில் இருந்து குதித்துள்ளார். அப்போது போலீசார் கீழே போர்வையை விரித்து வைத்திருந்ததால் சிறிய அடிகளுடன் ராகுல் உயிர்தப்பினார். இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவி லாவண்யாவின் பெற்றோர் நீதிபதியிடம் தனித்தனியாக வாக்குமூலம் அளிப்பு!

Published on 23/01/2022 | Edited on 23/01/2022

 

h

 

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் - கனிமொழி தம்பதியின் மகள் லாவண்யா (17). கனிமொழி இறந்துவிட்டதால் முருகானந்தம் சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். லாவண்யா 8 வகுப்பு முதல் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு கிருத்துவ பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார். தற்போது +2 படிக்கும் நிலையில் கடந்த 9ந் தேதி விடுதியில் இருந்த களைக்கொல்லி விஷத்தை குடித்து வாந்தி எடுத்த நிலையில் மறுநாள் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

 

அங்கு சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக 15 ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 19ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் தற்கொலைக்கு காரணம் மாணவியை மதம் மாறச் சொல்லி தொல்லை கொடுத்ததே என மாணவியின் வீடியோ பதிவை காட்டி பெற்றோரும், பா.ஜ.க வினரும் சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினர் ஆர்பாட்டம் செய்தனர். ஆனால் 16 ந் தேதி நீதிபதி வாங்கிய மரணவாக்கு மூலத்தில் தன்னை விடுதி காப்பாளர் சகாயமேரி செலவு கணக்குகளை எழுதச் சொல்லி டார்ச்சர் செய்தார், படிக்க விடுவதில்லை, விடுமுறைக்கும் ஊருக்கு அனுப்பவில்லை. அதனால் களைக்கொல்லி மருந்தை குடித்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 

வழக்கு விசாரனையை சிபிசிஐடி க்கு மாற்றக் கோரி பெற்றோர் தரப்பு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து சடலத்தை வாங்கி அடக்கம் செய்யவும் இன்று ஞாயிற்றுக் கிழமை சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் பெற்றோர் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்கவும், பெறப்படும் வாக்குமூலம் சீலிடப்பட்ட கவரில் திங்கள் கிழமை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

 

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.50 க்கு அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையிலான பாஜகவினர் முருகானந்தம் மற்றும் சரண்யாவை தஞ்சை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். தனி அறையில் தனித்தனியாக நீதிபதி பாரதி வாக்குமூலம் பெற்று பதிவு செய்தார். 

 

Next Story

பாலத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்... வைரலாகும் வீடியோ!

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

பாலத்தின் மீது ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தின் வடமேற்கு பகுதியான நவி மும்பையில் உள்ள வாஷி பகுதியில் புகழ்பெற்ற பாலம் உள்ளது. இரண்டு வழிப்பாதையான அந்த பாலம் மும்பையின் மிக நீளமான பாலமாக திகழ்கிறது. இந்நிலையில் இன்று காலை அந்த பாலத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர் திடீரென பாலத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கத்தியுள்ளார்.

 

 


இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பாலத்தின் வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அந்த பெண்ணுடன் பேசி சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். அவரிடம் பேசிகொண்டே அவரின் அருகில் சென்ற போலிசார் அவரின் கையை பற்றி அவரை கீழே விழாதபடி பிடித்துக்கொண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.