Published on 07/05/2019 | Edited on 07/05/2019
டெல்லியில் உச்சநீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். ஆனால் குற்றம் சாட்டிய அந்த பெண் விசாரணைக்கு ஒத்துழைக்காததாலும், ரஞ்சன் கொக்காய்க்கு எதிராக எந்த ஆதாரங்களுக்கும் இல்லாததாலும் அவர் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பாப்டே தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. இதனை எதிர்த்து பெண் வழக்கறிஞர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பிருப்பதால் உச்சநீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.