Skip to main content

மஹாராஷ்ட்ரா கனமழை: நேற்று மாலையிலிருந்து மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பலி!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

maharashtra

 

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மஹாராஷ்ட்ராவில் கடந்த சில நாட்களாக, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிராமங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

 

மாநில பேரிடர் மீட்புப் படையும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர்.

 

இந்தநிலையில், மஹாராஷ்ட்ராவில் நேற்று (23.07.2021) மாலையிலிருந்து மட்டும், மழை மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால் 136 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்