மூளைக்காய்ச்சல் காரணமாக 100 குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்த சம்பவம் பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த 4 மாதங்களாக மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு சிகிச்சை நடந்து வந்த நிலையில் கடந்த வாரத்தில் 57 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மேலும் பலர் நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்பட்டது.
இந்நிலையில் 10 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் அங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அந்த மாநில அரசு கணக்கிடாத நிலையில், குழந்தைகள் மட்டும் 100 பேர் என அறிவித்துள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இந்த நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் என்ன செய்வது என தெரியாமல் அம்மாநில அரசு விழி பிதுங்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நோய் உத்தரப்பிரதேசத்தை தாக்கியபோது 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.