நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாகக் கூடாது, வங்கியில் வாங்கிய கடனை வேண்டுமென்றே செலுத்தாமல் இருப்பது கிரிமினல் குற்றம் என்று அறிவிக்க வேண்டும், ஜி.எஸ்.டி என்ற பெயரில் சேவைக் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது உள்ளிட்ட 17 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.
இதையடுத்து வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடர்ந்து 2 தினங்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைத்து வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- சி.ஜீவா பாரதி
படம்: ஸ்டாலின்