Skip to main content

‘வயநாடு vs ரேபரேலி’ - ராகுல் காந்தி எடுத்த முடிவு என்ன?

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
'Wayanadu vs Raebareli' - What was Rahul Gandhi's decision

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார். இதனையடுத்து நேற்று (11.06.2024) உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற கட்சியின் பாராட்டு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று (12.06.2024) கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மலப்புரம் மாவட்டம் எடவன்னாவில் ராகுல் காந்தி பேரணியாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இரண்டு தொகுதிகளிலும், ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதால் எந்த தொகுதியை ராஜினாமா செய்யப்போகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமோதி தொகுதியிலும், வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் அமோதியில் தோல்வியடைந்தார். 

'Wayanadu vs Raebareli' - What was Rahul Gandhi's decision

அதே சமயம் வயநாட்டில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். தற்போது மீண்டும் வயநாடு தொகுதியில் நின்று ராகுல்காந்தி வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் காலம் காலமாக ராகுல் காந்தியின் குடும்பத் தொகுதியாக இருக்கும் ரேபரேலியிலும் வெற்றி பெற்றிருக்கிறார். இத்தகைய சூழலில்தான் ராகுல்காந்தி எந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கப்போகிறார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்திக்கு தேசத்தை காக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே ராகுல் காந்தியை புரிந்துகொண்டு கேரள மக்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் மக்கள் வருத்தப்படக்கூடாது என கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுதாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்