
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோவில். பழம் பெருமை வாய்ந்த இக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் மங்கள இசை முழங்கயாக சாலை பூஜைகள் ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக 3ம் தேதி காலை 10 மணியளவில் யாகசாலை ஹோமங்கள், மஹா பூர்ணாஹ_தி, சாற்று முறை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் கண் திறத்தல் நடைபெ ற்றது. 4ம் தேதி அதிகாலை 4 மணியளவில் கோபூஜை, விஸ்வரூப தரிசனம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.காலை 10.05 மணியளவில் கடன் புறப்பாடு நடை பெற்று பெருமாள், மூலவர், சன்னதி, பரிவார சன்னதிகள் மும்மூர்த்திகளுக்கும் ராஜகோபுரங்களுக்கும், சொர்க்கவாசல் கோபுரங்களுக்கு புனி தநீரை பட்டாச்சாரி யர்கள் ஊற்றி கும்பா பிஷேகத்தை நிறைவு செய்தனர்.

யாகசாலை பூஜைகளை திருக்கோயில் பட்டாச்சாரியார் ஜெ.ராஜா சுகுமார் ஐய்யங்கார் தலைமையில் பட்டாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர். கோவில் யாகசாலை பூஜையிலிருந்து கோவில் உள்ளே கோபுர கலசத்திற்கு ஊற்றுவதற்காக புனித கலசங்களை எடுத்துச்செல்லும் பட்டாச்சாரியர்கள் கடும் போராட்டத்திற்கு பின்பே உள்ளே செல்லும் நிலைமை ஏற்பட்டது. கூட்டத்தை கோவில் நிர்வாகமோ, காவல்துறை நிர்வாகமோ கட்டுப்படுத்த தவறியதாலும் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை முறையாக செய்யாததாலும் பக்தர்கள் கும்பாபிஷேக விழாவை முழுமையாக காணமுடியாத நிலை ஏற்பட்டது. கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் நன்கொடையாளர்களை மட்டும் கவனிப்பதில் குறியாக இருந்ததால் கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கும்பாபிஷேகம் முடிந்து பக்தர்களுக்கு சொர்க்க வாசல் அருகே பிரசாதபை வழங்கும் இடத்தில் முறையான பாதுகாப்பு இல்லாததால் பிரசாதபை கொடுத்தவர்கள் பக்தர்கள் முகத்தில் பிரசாத பையை தூக்கி எரிந்தனர். இதை அங்கிருந்த பலரும் படம் பிடித்தனர். காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதால் கும்பாபிஷேகம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வருவதற்கு பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர்.

குறிப்பாக குழந்தையுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். குழந்தைகள் அழதொடங்கியவுடன் பக்தர்களே கூட்டத்தை ஒதுக்கி குழந்தையுடன் வந்த பக்தர்களை வெளியேற்றினார்கள். முறையான குடிதண்ணீர் வசதி இல்லாததால் காலை வெயிலில் பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர். கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லாததால் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினார்கள். குறிப்பாக பெண்கள் கடும் அவதிப்பட்டனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கும்பாபிஷேகத்தை ஏனோதானோ என்று நடத்தியதாக பக்தர்கள் புலம்பி சென்றனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் திண்டுக்கல் எம்.பி. ஆ.சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பிரதீப், தாடிக் கொம்பு சௌந்த ராஜாபெருமாள் கோவில் அறங்காவலர் வினோத் பாலாஜி, அபிராமி அம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் அரவிந்தா செல்போன் வீரக் குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி மாலா, செயற்பொறியாளர் கே.ராஜன், மண்டல ஸ்தபரி ஆய்வாளர் காசி மணிகண்டன், மண்டல இணை ஆணையர் கார்த்திக், வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் உள்பட அரசு அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.