Published on 18/04/2020 | Edited on 18/04/2020
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக இதுவரை 2,28,823 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை மீறியதாக இதுவரை 2,14,951 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 29,455 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர், காவல்துறையினர். 28,285 இரு சக்கர வாகனங்கள், 134 மூன்று சக்கர வாகனங்கள், 1,036 நான்கு சக்கர வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.