தமிழக அரசின் வருவாய் ரூ.1.76 லட்சம் கோடி எனவும் செலவு ரூ.1.91 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் வருவாய் பற்றாக்குறை ரூ.17,490 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேலும் தமிழக பட்ஜெட்டில் அவர் கூறியதாவது,
2018-19 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாய் ரூ.1.76 லட்சம் கோடியாகவும், செலவு ரூ.1.91 லட்சம் கோடியாகவும் இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.17,490 கோடியாக இருக்கும்.
கடந்த ஆண்டு ரூ.14,977 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை ரூ. 23,176 ஆக குறைந்துள்ளது.
மானியம் உதவித்தொகைக்கு ரூ.75,723 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில வளர்ச்சி நிதியத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு ரூ.7,877 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சம்பள செலவினங்களுக்கு 52,171 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய வரிகளில் தமிழகத்திற்கான பங்கு ரூ.31,707 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வட சென்னை மாவட்ட வெள்ள தடுப்புக்கு ரூ.3,243 கோடியில் திட்டம்.
3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.