பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஊடகங்கள், மற்றும் செய்தித்தாள்களில் வரும் செய்தியை அடிப்படையாக கொண்டு வழக்கு தொடரமுடியாது என தெரிவித்த நீதிபதிகள், குற்றம்சாட்டபட்டவரின் ஒப்புதல் வாக்குமூலம் எப்படி வெளி வருகின்றது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் இது போன்ற விசயங்கள் எப்படி வெளிவருகின்றது. அரசு அதிகாரிகள் யார் என கேள்வி எழுப்பினார். மேலும் பத்திரிக்கை சுகந்திரம் என்பதை எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனு தொடர்பாக பல்கலை கழகங்களின் வேந்தரான ஆளுனர், தமிழக அரசு, சிபிசிஐடி, காமராசர் பல்கலைக்கழக பதிவாளர், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி முதல்வர், செயலாளர் ராமசாமி, குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியை நிர்மலாதேவி, அருப்புக்கோட்டை நகர காசல் ஆய்வாளர் முருகேஷ்வரி ஆகியோர் மே 23 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.