Skip to main content

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா; உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Manonmaniam Sundaranar University. convocation; Minister of higher education boycott!

திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (03.02.2024) 30 வது பட்டமளிப்பு விழா வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்றார். அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதே சமயம் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. இதன் மூலம் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழா கடந்த 29 ஆம் தேதி (29.01.2024) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவிலும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்