Skip to main content

மதனின் திமிர் பேச்சு! -போலீசார் கொடுத்த பதிலடி! (படங்கள்)

Published on 19/06/2021 | Edited on 19/06/2021
dddd

 

சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அந்தப் புகாரில் அவர் youtube பயன்படுத்தி வருவதாகவும், மதன் என்பவர் பல்வேறு டைட்டில்களில் youtube நடத்தி வந்துள்ளார். அதில் வரும் வீடியோக்களை பார்த்ததாகவும் மேற்படி வீடியோக்களில் பெண்களை மிகவும் ஆபாசமான, அருவருக்கத்தக்க, கொச்சையான, வக்கிரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.

 

மதன் என்பவர் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை ஆன்லைனில் விளையாடுமபோது அதனை ஸ்டீரிம் செய்து விடுகிறார் என்றும் அருவடைய வீடியோக்களில் பெண்களின் கண்ணியத்தை குலைக்கும வகையிலும் கற்பு நெறியை அவமதிக்கும் வகையிலும் பெண்களின் அந்தரங்க விசயத்தை குறிப்பிடும் வகையிலும் பேசி உள்ளார்.

 

dddd

 

மேற்படி நபரின் சேனலில் பெரும்பாலும் இளம் வயதினர் அதிகம் பார்ப்பவர்களாக உள்ளனர். இவருடைய பேச்சு பாலுணர்வை தூண்டும் வகையில் வக்கிரமாக உள்ளதாகவும் எனவே அவரது சேனல்களை தடை செய்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

 

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புலன் விசாரணையில் அந்த மதன் சேலத்தை பூர்வீகமாக கொண்டவர் என தெரிய வந்தது. தற்சமயம் வேங்கைவாசலில் வசித்து வரும் இன்ஜினியரிங் பட்டதாரியான மதன்குமார் மற்றும் அவருடைய மனைவி கிருத்திகா ஆகியோர் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பப்ஜி கேமை ஆன்லைனில் விளையாடி வருவதும் அதற்காக யூடியூப் சேனல்கள் துவங்கி அதில் 8 லட்சம் பேர்களை சப்கிரைபர்ஸ் ஆக சேர்த்து பணம் பெற்றுக்கொண்டு விளையாடி வருவது தெரிய வந்தது. 

 

dddd

 

மேலும் அந்த வீடியோக்களில் பெண்களின் அந்தரங்கம் குறித்து ஆபாசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தியும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசி பதிவேற்றம் செய்து வருகிறார்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் தலைமறைவானார்கள். தலைமறைவான இவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில்தான் கடந்த 15.06.2021 அன்று மதன்குமார் மனைவி கிருத்திகாவை போலீசார் சேலத்தில் கைது செய்தனர்.

 

பின்னர் அவரை சென்னை கொண்டு வந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் யூடியூப் சேனல்களை ஆரம்பித்து குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும், ஆடம்பரமாக வாழவேண்டும் என்று ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பெறுவதற்காக வங்கி கணக்குகளை துவங்கி பணம் செய்து வருவதும் தெரிய வந்தது. 

 

dddd

 

மேலும் கிருத்திகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வேங்கை வாசலில் உள்ள அவரது வீட்டில் இருந்து செல்போன், டேப்லட், கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டது. அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி வரும் 30ஆம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்தநிலையில் இந்த விவகாரத்தில் தனிப்படை போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்து. அதன் அடிப்படையில் தர்மபுரி சென்ற போலீசார் மதன்குமாரை 18.06.2021 ஆம் தேதி காலை கைது செய்தனர். விசாரணை நடத்துவதற்காக மதன்குமாரை சென்னை அழைத்து வந்தனர். மதன்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மதன்குமாரிடம் இருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், இன்டர்நெட் டாங்கில் ஆகியவையதும் கைப்பற்றப்பட்டது. மேலும் முறைகேடான வகையில் சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட விலை உயர்ந்த இரண்டு ஆடி கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதன்குமார் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்குள் முடக்கப்பட்டுள்ளது. 

 

மதன்குமாரை கைது செய்த போலீசார் அவரை சென்னை மாநகர ஆணையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் அவரை படம் எடுத்தனர். அப்போது, ''நான் என்ன பிரைம் மினிஸ்டரா?'' என மதன் அப்போது கேட்டபோது, 'நீ அக்யூஸ்ட் தான் வா'  என போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்