ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில்,
கடந்த 2013 மார்ச் 23ல் ஸ்டெர்லைட்டில் இருந்து விஷவாயு கசிந்து கண் எரிச்சல் ஏற்பட்டதாக புகார் வந்தது. மக்கள் புகாரை அடுத்து 2013 மார்ச் 29ல் ஸ்டெர்லைட்டை மூட உத்தரவிடப்பட்டது. ஸ்டெர்லைட் மேல்முறையீடு செய்ததால் ஆலையை இயக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதையடுத்து பசுமை தீர்ப்பாயம் அனுமதியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது, பொது மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.