இன்று காலை நிலவரப்படி, சென்னை அருகே 540 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு அருகே 640 கி.மீ. தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வந்தது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,
சென்னைக்கு கிழக்கே 490 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு 580 கி.மீ. தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் உள்ள இந்த புயலின் வேகம் 6 கி.மீ. லிருந்து 10 கி.மீ. -ஆக தற்போது அதிகரித்துள்ளது. இதனால் கடலூர், தஞ்சாவூர், நாகை, காரைக்கால், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையில் பலத்த காற்று வீசும், பரவலானது முதல் மிக அதிக கனமழை பெய்யும் என்றும், நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் மிதமான மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.