Published on 02/02/2020 | Edited on 02/02/2020
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 14,000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சீனர்கள், சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு இ- விசா வசதியை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா.