Skip to main content

மத்திய அரசு பதக்கம்! தமிழக பெண் இன்ஸ்பெக்டர்கள் தேர்வு! 

Published on 12/08/2020 | Edited on 12/08/2020

 

புலனாய்வுப் பணிகளில் சிறப்பாகப் பணிபுரியும் காவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கம் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான அந்தப் பதக்கத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் துறையினரை தேர்வு செய்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அவர்களுக்கு சுதந்திர தினத்தன்று பதக்கம் வழங்கப்படும். 

 

ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா, நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்த்ரகலா, பெருநகர சென்னையின் மத்திய க்ரைம் ப்ராஞ்ச் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலா ஆகிய 6 பேரும் புலனாய்வுப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றியதற்கான உள்துறை அமைச்சகத்தின் பதக்கத்தைப் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்