நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, கடந்த 31-ஆம் தேதி தீக்குளித்து உயிரை விட்ட மதிமுக நிர்வாகி ரவியின் இல்லத்தில் நடந்த 16-வது நாள் கருமாதியில் கலந்துகொள்வதற்கு இன்று சிவகாசி வந்தார் வைகோ.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், “திட்டமிட்டு மத்தியில் இருக்கக்கூடிய நரேந்திரமோடி அரசு, கர்நாடகாவில் போய் சொல்லிட்டாங்களே! உங்க நலனுக்கு எதிரான எதையும் காவிரி பிரச்சனையில் செய்ய மாட்டோம்னு. மத்திய அரசு நயவஞ்சகத்தோடு செயல்படுகிறது. தமிழ்நாடு அரசு முறையாக நல்ல வழக்கறிஞர்களைக் கொண்டு போராடவில்லை. இப்பவும் ஜனங்களைக் குழப்புறாங்க. தீர்ப்பே நமக்கு விரோதமா, தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுட்டாங்களே உச்ச நீதிமன்றத்துல.
தமிழகத்தில் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்திருந்தால் இது மாதிரி விடமாட்டார்கள். அண்ணா இருந்திருந்தால் நிலைமையே வேறு. தமிழகத்தின் எதிர்காலமே வேறு. இவங்க பயந்து போய் கிடக்குறாங்க. ஒரு அப்பாயின்ட்மெண்ட் வாங்க முடியல அரசியல் கட்சி தலைவர்களுக்கு. 11 வருஷம் கழிச்சு அனைத்துக்கட்சி கூட்டம் கூடிருக்கு. பிரதமர் வந்து ஏழரை கோடி மக்களின் பிரதிநிதிகளை.. இவ்வளவு பேரை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாதா பிரதமருக்கு? இவ்வளவு அகந்தை இருக்கக்கூடாது.
தமிழக அரசைப் பொறுத்த மட்டிலும், எந்த கடமையையும் செய்யாமல், பார்லிமெண்டில் தர்ணா பண்ணுனோம்; உண்ணாவிரதம் இருந்தோம்னு சொல்லி மக்களை ஏமாத்துறாங்க. இது தமிழகத்தின் சாபக்கேடு.” என்றார் வேதனையுடன்.