Published on 11/04/2019 | Edited on 12/04/2019

ஆந்திரா மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. காலையிலிருந்தே மக்கள் வாக்களித்த வண்ணம் உள்ளனர். அனந்தபூர் அருகேயுள்ள கூட்டியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஜன சேனா கட்சியைச் சேர்ந்த மதுசூதன் குப்தா என்ற வேட்பாளர் உடைத்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்போது அவர் இப்படி ஒரு தேர்தலை ஏன் நடத்தவேண்டும், இது அநியமான ஒன்று. எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.