உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று (28/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அதேபோல் தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்ததடுத்த இடங்களில் உள்ளன.
இந்த நிலையில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று (27/05/2020) வரை 4,42,970 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் செய்த மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (28/05/2020) காலை 09.00 மணி வரை நாடு முழுவதும் 33,62,136 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. குறிப்பாக 24 மணிநேரத்தில் மட்டும் 1,19,976 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது.