உலகம் முழுவதும் கரோனா ஆட்டி படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அதன் பிடியில் இருந்து யாரும் தப்பவில்லை. உலக நாடுகள் எல்லாம் அதன் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதற்கிடையே சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகிப் பலியாகிறார்கள். ஆனால் இளைஞர்கள் சிலர் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிவது தொடர்கதையாகி வருகின்றது. காவலர்கள் அன்பாகச் சொல்லிப்பார்த்தார்கள், அடித்தும் பார்த்தார்கள். ஆனால் இளைஞர்கள் கேட்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட போலிசார் ட்ரோன் மூலம் கூட்டத்தைக் கலைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் போலிசார் சாலையில் சுற்றியவர்களைக் கரோனா வந்தவருடன் சேர்ந்து ஆம்புலன்ஸில் அமர வைப்பது மாதிரி செட்டப் காட்சிகளை அரங்கேற்றினார். ஆம்புலன்ஸ் உள்ளே சென்ற இளைஞர்கள், அங்கு தொற்று வந்தவர் போல படுத்திருந்தவரைப் பார்த்து கண்ணீருடன் கதறினார்கள். வண்டியின் ஜன்னல் பகுதியில் இருந்து ஒருவர் மாற்றி ஒருவர் குதித்துள்ளனர் அய்யா, நாங்கள் இனிமேல் ஊர் சுற்ற மாட்டோம் என்று கதறிய நிலையில், காவல் துறையினர் அவர்களை வீட்டிற்கு அனுப்பினர். இந்தச் சம்பவம் நடைபெற்று சில தினங்கள் ஆன நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் நேற்று ட்ரோன் மூலம் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். அப்போது காட்டுப்பகுதிக்கு நடுவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவர்களை ட்ரோன் படம்பிடித்தது. ட்ரோனைப் பார்த்த இளைஞர்களை துண்டைக் காணும் துணியைக் காணும் ரேஞ்சில் தெறித்து ஓடினார்கள். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இளைஞர்கள் தெறித்து ஓடும் வீடியோ இதோ...